விமான பைலட், கோ-பைலட் அஷ்ரப்-பிரபு யுவராஜ் இருவரும் ர என்ற படம் மூலம் சினிமாவுக்கு வந்திருக்கின்றனர். இதுபற்றி டைரக்டர் பிரபு யுவராஜ் கூறியது: நானும், அஷ்ரப்பும் விமான பைலட்டாக இருக்கிறோம். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. ஒரே விமானத்தில் இருவரும் பணியாற்றி வருவதால் சினிமாபற்றி நிறைய பேசி ர என்ற பெயரில் படம் தொடங்கினோம். சங்க தமிழிலிருந்து இந்த வார்த்தை எடுக்கப்பட்டது. ர என்பதற்கு பறிமுதல் என்று அர்த்தம். 16, 18ம் நூற்றாண்டில் நடக்கும் சில சம்பவங்களுடன் 21ம் நூற்றாண்டில் நடக்கும் சம்பவங்களுடன் இணைத்து இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. அஷ்ரப் ஹீரோ.
அதிதி செங்கப்பா ஹீரோயின். அமீன், அக்பர் தயாரிக்கின்றனர். ராஜ் ஆரியன் இசை. சரவணன் ஒளிப்பதிவு. மாறுபட்ட திரைக்கதையுடன் துபாய், சிங்கப்பூரில் ஷூட்டிங் நடந்துள்ளது. இதன் ஆடியோ சிடியில் 5 பாடல்கள் உள்ளது. ஆனால் படத்தில் 1 பாடல் மட்டுமே இடம்பெறும் என்றார்.